மனைவி ஆர்த்தியை சர்ப்ரைஸ் செய்த சிவகார்த்திகேயன்.. அமரன் படம் போல செய்த விஷயம்! வீடியோ
அமரன் படம் பெரிய ஹிட் ஆகி இருப்பதால் நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார். 250 கோடிக்கும் மேல் வசூலித்து இருக்கிறது இந்த படம்.
தமிழ் சினிமாவில் 250 கோடி மைல்கல்லை எட்டிய நான்காவது நடிகர் சிவகார்த்திகேயன் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
மனைவிக்கு சர்ப்ரைஸ்
அமரன் படத்தின் ஷூட்டிங்கில் இருந்து அதே உடையில் அப்படியே வீட்டுக்கு சென்று மனைவி ஆர்த்தியை சர்ப்ரைஸ் செய்திருக்கிறார் சிவகார்த்திகேயன். அமரன் படத்தில் இதே போல ஒரு காட்சி இருக்கும்.
ஆர்த்திக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல தற்போது சிவகார்த்திகேயன் அந்த வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.
சிவகார்த்திகேயன் - ஆர்த்தி ஜோடிக்கு ஆரதனா என்ற மகளும், குகன், பவண் என இரண்டு மகன்களும் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹெலிகொப்டரிலிருந்து கொட்டிய பணம்: இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி News Lankasri

ஒரே ஒரு மாணவன் மற்றும் ஒரே ஒரு ஆசிரியருக்காக செயல்படும் அரசு பள்ளி.., எந்த மாநிலத்தில்? News Lankasri
