தெலுங்கில் அறிமுகமாவதை உறுதி செய்த நடிகர் சிவகார்த்திகேயன் !
நடிகர் சிவர்கார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவின் டாப் நடிகராக திகழ்ந்து வருபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரியளவில் வரவேற்பை பெற்று வருகிறது.
அந்த வகையில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் திரைப்படம் இன்னும் சில தினங்களில் வெளியாகவுள்ளது.
நீண்ட நாட்களுக்கு பிறகு முன்னணி நடிகரின் திரைப்படம் திரையரங்கில் வெளியாக இருப்பதால், தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவரும் இப்படத்தை எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கின்றனர்.
இந்நிலையில் டாக்டர் படத்தின் தெலுங்கு ப்ரோமோஷன் நிகழ்ச்சி நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குனர் நெல்சன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
இதில் பேசிய சிவகார்த்திகேயன், விரைவில் தெலுங்கு படத்தில் நடிக்க இருப்பதாகவும், இதற்காக தெலுங்கு கற்று வருவதாக தெரிவித்துள்ளார். அந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு விரைவில் வெளியிடுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.