தனுஷுடன் மோதும் சிவகார்த்திகேயன்.. 7 வருட காத்திருப்புக்கு பின் ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி
அயலான்
ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் திரைப்படம் அயலான். இப்படத்தின் அறிவிப்பு கடந்த 2016ஆம் ஆண்டு வெளிவந்தது.
இன்று நேற்று நாளை படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படத்தை இயக்க தயாரானார் ரவிக்குமார்.
2016ஆம் ஆண்டு துவங்கிய இப்படம் பல பிரச்சனைகளை கடந்து படப்பிடிப்பை நிறைவு செய்தது. பின் CG வேலைகள் காரணமாக ரிலீஸ் தாமதமாகி கொண்டே இருந்தது.
ரிலீஸ் தேதி
இந்நிலையில், தற்போது அயலான் படத்தின் ரிலீஸ் தேதி உறுதி செய்யப்பட்டுள்ளதாம்.
ஆம், வருகிற தீபாவளிக்கு சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் வெளியாகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது. ஏறக்குறைய இது உறுதியான தகவல் என்று தான் கூறப்படுகிறது.
கார்த்தி, தனுஷுடன் மோதும் சிவகார்த்திகேயன்
அயலான் வெளியாகவுள்ள அதே நாளில் தனுஷின் கேப்டன் மில்லர் படமும் வெளியாகிறது. அதுமட்டுமின்றி கார்த்தியின் ஜப்பான் திரைப்படமும் அதே நாளில் தான் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இதனால் கண்டிப்பாக இந்த மூன்று முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இடையே கடும் மோதல் இருக்கும் என தெரிகிறது.
நடிகர் சிவகார்த்திகேயனுக்கு முத்தம் கொடுக்கும் இந்த நடிகை யார் தெரியுமா?- இந்த பட நாயகியா?

மலிவான வட்டி விகிதத்தில் ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கும் இந்திய அரசு.., எந்தெந்த வங்கிகள் தெரியுமா? News Lankasri

கைவிடப்பட்ட குழந்தையை மீட்ட இளம்பெண்: பிரபல நடிகையின் சகோதரி குஷ்பூவுக்கு குவியும் பாராட்டுகள் News Lankasri

சொகுசு கார் முதல் பல ஆயிரம் டொலர் சம்பளம் வரை! போப் பிரான்சிஸ் செய்த நெகிழ்ச்சி செயல்கள் News Lankasri
