எதிர்பார்க்காத கூட்டணி.. சென்சேஷனல் இயக்குனருடன் இணையும் சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன்
ரசிகர்களால் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடப்படும் கதாநாயகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது அமரன் மற்றும் எஸ் கே 23 ஆகிய இரு திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இதில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வரும் அமரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் துவங்கியுள்ளார். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வரும் எஸ் கே 23 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
எதிர்பார்க்காத கூட்டணி
இந்த நிலையில், இப்படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கவுள்ள திரைப்படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, சென்சேஷனல் இயக்குனரான சுதா கொங்கராவுடன் இணையவுள்ளாராம் சிவகார்த்திகேயன்.
சூர்யாவை வைத்து புறநானூறு திரைப்படத்தை சுதா கொங்கரா இயக்கவிருந்த நிலையில், தற்போது அப்படம் Drop ஆகிவிட்டது என்று கூறப்படுகிறது.
அதற்கு பதிலாக தான் தற்போது சிவகார்த்திகேயனுடன் இயக்குனர் சுதா கொங்கரா இணைகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவலை பிரபல மூத்த பத்திரிகையாளர் பிஸ்மி பகிர்ந்துகொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
