சிவகார்த்திகேயன் மீண்டும் ஹிட் பட இயக்குனருடன் கூட்டணி! யார் தெரியுமா?
சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது இரண்டு படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன. அயலான் மற்றும் மாவீரன் ஆகிய படங்களை தொடர்ந்து தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு படத்தில்
சிவகார்த்திகேயன் யாருடன் கூட்டணி சேர போகிறார் என்கிற தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.

டான் இயக்குனர்
டான் படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி உடன் தான் அவர் கூட்டணி சேர்கிறாராம். அவர் டான் படத்திற்கு பிறகு ரஜினியை இயக்க போவதாக தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் ரஜினி ஞானவேல் இயக்கத்தில் படம் நடிப்பதாக அறிவித்து இருக்கிறார்.
இந்த நிலையில் தான் சிவகார்த்திகேயன் மீண்டும் அவருடன் ஜோடி சேர்வதாக தகவல் வந்திருக்கிறது. சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வரும் படங்கள் முடித்தபிறகு தான் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வீட்டில் 2000 ரூபாய் நோட்டுகளை குவித்து வைத்திருக்கும் நடிகர்! யார் தெரியுமா?