ஏன்னா மனுஷன்யா ! சிவகார்த்திகேயனின் சமீபத்திய வைரல் வீடியோ, என்ன செய்துள்ளார் பாருங்க..
தமிழ் சினிமாவில் தற்போது டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் நடிகர் சிவகார்த்திகேயன், இவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய வசூல் சாதனைகளை படைத்து வருகிறது.
அந்த வகையில் கடந்த வருடம் இவர் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் அனைவரிடமும் பெரிய வரவேற்பை பெற்று 100 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்தது.
டாக்டர் படத்தை சிவகார்த்திகேயனின் டான் திரைப்படமும் விரைவில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் பெரியளவில் உள்ளது.
இந்நிலையில் நேற்று ராஜமௌலியின் RRR பட ப்ரோமோஷன் சென்னையில் நடந்தது, இதில் சிவகார்த்திகேயன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் முக்கிய விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இதில் சிவகார்த்திகேயன் செய்த விஷயம் ஒன்று இணையத்தில் செம வைரலாகியுள்ளது. ஆம், ராஜமௌலியில் அருகில் உட்கார்ந்து இருந்த சிவகார்த்திகேயன் மேடையில் தொகுப்பாளர் டிரம்ஸ் கலைஞரை பாராட்ட மறந்துவிட்டார்.
அதை ஞாபகப்படுத்தி சிவகார்த்திகேயன் கீழே இருந்தே கையசைத்தபடி சொல்லியுள்ளார். இதை கண்ட ரசிகர்கள் "ஏன்னா மனுஷன்யா" என பாராட்டி அந்த வீடியோவை இணையத்தில் பரப்பி வருகின்றனர்.
என்னதான் டாப் நடிகராக தற்போது சிவகார்த்திகேயன் இருந்தாலும், எவ்வளவு நல்ல தொகுப்பாளராக அவர் இருந்தார் என்பதை இந்த வீடியோவிலே தெரிந்துவிடும்.
பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு நேர்ந்த துயரம்... அறைத் தோழர் மீது கொலைக் குற்றச்சாட்டு News Lankasri