குடும்பத்துடன் திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்த நடிகர் சிவகார்த்திகேயன்.. புகைப்படம் இதோ
சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்து முன்னணி ஹீரோவாக இருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் பராசக்தி படம் கடைசியாக வெளிவந்தது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளியான இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைக்க, வசூலில் சரிவை சந்தித்தது. பராசக்தி படத்தை தொடர்ந்து இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கப்போகிறார் என கூறப்பட்ட நிலையில், தற்போது இப்படத்திற்கான ஸ்கிரிப்ட் ஒர்க் இன்னும் முடியவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்ததாக தாய் கெழவி பட இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில்தான் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கிறாராம். இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது என்கின்றனர்.
திருச்செந்தூர் கோவிலில் சிவா
நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் சேர்ந்து திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்துள்ளார். அங்கு தனது மகன்கள் இருவருக்கும் மொட்டை அடித்துள்ளார்.

திருச்செந்தூர் கோவிலில் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சிவகார்த்திகேயனின் மனைவி ஆர்த்தி தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..
பிரித்தானியாவில் தொழிலாளர்களை விட..வேலையின்மை உதவித்தொகை பெறுவோர் அதிகம் உள்ள பகுதிகள் News Lankasri