தனது மனைவியுடன் பிரபல திரையரங்கில் குட் பேட் அக்லி பார்த்த சிவகார்த்திகேயன்.. வீடியோவுடன் இதோ
குட் பேட் அக்லி
தமிழ் சினிமா ரசிகர்கள் இன்னும் கொஞ்ச நாட்களுக்கு குட் பேட் அக்லி பெயரை தான் அதிகம் பயன்படுத்தப் போகிறார்கள்.
காரணம் படம் நேற்று ஏப்ரல் 10, செம மாஸாக வெளியாகி இருந்தது. படமும் தீவிர அஜித் ரசிகர்கள் கொண்டாடும் விதமாக அமைந்துவிட பாக்ஸ் ஆபிஸிலும் தெறிக்கவிடப் போகிறது.
முதல் நாளே ரசிகர்களை தாண்டி பிரபலங்கள் பலரும் திரைப்படத்தை பார்த்தனர்.
சிவகார்த்திகேயன்
முதல் நாள் அஜித்தின் மனைவி ஷாலினி மற்றும் அவரது மகள் அனோஷ்கா ஆதிக் ரவிச்சந்திரன், கவின் என பிரபலங்கள் பலரும் முதல் நாளே படத்தை பார்த்தனர்.
இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவி ஆர்த்தியுடன் சென்னை சத்யம் திரையரங்கில் படம் பார்த்துள்ளனர். இதோ வீடியோ,
#SK annan & #AarthySK anni watched #GoodBadUgly at Sathyam Cinemas ❤️🔥 pic.twitter.com/VtiQTqEJPW
— Kanagavel (@kv_26_) April 10, 2025
சென்னையில் ரூ. 2.5 கோடி வசூலும், தமிழகத்தில் ரூ. 35 கோடிக்கு மேலாகவும் படம் வசூலித்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.