அடேங்கப்பா சிவகார்த்திகேயன் மகன் குகனா இது... நன்றாக வளர்ந்துவிட்டாரே, லேட்டஸ்ட் போட்டோ
சிவகார்த்திகேயன்
எந்த ஒரு பின்னணியும் இல்லை என்றாலும் திறமையால் முன்னேற முடியும் என காட்டிய பலர் உள்ளனர், அதில் ஒருவர் தான் சிவகார்த்திகேயன்.
இப்போது சினிமாவிற்கு வர துடிக்கும் பல கலைஞர்களுக்கு ஒரு உதாரணமாக உள்ளார். கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் அவருக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்துள்ளது.
அப்படத்தை தொடர்ந்து மதராஸி, பராசக்தி என தொடர்ந்து படங்கள் ரிலீஸ் ஆக உள்ளது, இன்னொரு பக்கம் கதைகள் கேட்ட வண்ணம் உள்ளார்.
மகன் போட்டோ
சினிமாவை தாண்டி சிவகார்த்திகேயனின் குடும்ப வாழ்க்கையும் சந்தோஷமாக அமைந்துள்ளது.
தனது உறவினர் பெண் ஆர்த்தி என்பவரை திருமணம் செய்த சிவகார்த்திகேயனுக்கு ஆராதனா, குகன் மற்றும் பவன் என 3 குழந்தைகள் உள்ளனர்.
இன்று சிவகார்த்திகேயன்-ஆர்த்தியின் மகன் குகனிற்கு பிறந்தநாளாம், அதனால் மகனின் ஸ்பெஷல் புகைப்படங்களை வெளியிட்டு அப்பாவை போல மகன் என பதிவு செய்துள்ளார் ஆர்த்தி.
குகனின் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கியூட் போட்டோ, பிறந்தநாள் வாழ்த்துக்கள் என பல கமெண்ட் போட்டு வருகிறார்கள்.