சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி ! அருண் விஜய் மகனை வாழ்த்திய சிவகார்த்திகேயன்...
விஜய் மகனை வாழ்த்திய சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போதும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகியுள்ளார், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரியளவில் வரவேற்பை பெற்று வருகிறது.
அதன்படி டாக்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள திரைப்படம் டான்.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது, ரசிகர்கள் அனைவரும் தற்போது அப்படத்தின் ரிலீஸை தான் எதிர்நோக்கியுள்ளனர்.
இந்நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் மற்றும் அருண் விஜய் இரண்டு நடிகர்களுக்கும் இடையே எப்போதும் ஒரு சர்ச்சை உண்டு, அந்த சர்ச்சை அருண் விஜய் பதிவிட்ட ஒரு ட்வீட்-ல் இருந்து தான் தொடங்கியது அது தற்போது வரையில் பேசப்பட்டு வருகிறது.
அப்படி இருக்கையில் இந்த சர்ச்சைகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் அருண் விஜய்யின் மகன் அர்னவ்-விற்கு பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்துள்ளார். அந்த பதிவிற்கு லைக்ஸ்களை குவித்து வருகின்றனர் ரசிகர்கள்.
Happy birthday Thambi ❤️Enjoyed your performance in Oh my dog.. Keep going, best wishes for your studies and acting career ???? https://t.co/C0VIlb7ziN
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) May 9, 2022
திருமணத்தை அறிவிக்க மோசமான போட்டோ வெளியிட்ட அர்ஜுன் ரெட்டி நடிகர்! வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்