சிவகார்த்திகேயன் தூக்கி வைத்திருக்கும் இந்த குழந்தை யார் தெரியுமா?
நடிகர் சிவகார்திகேயன் சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர். அவர் தற்போது முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வளர்த்து நிற்கிறார். கடந்த வருடம் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
அடுத்து டான், அயலான் ஆகிய படங்கள் தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. அதுமட்டுமின்றி தெலுங்கு - தமிழ் இரண்டு மொழிகளிலும் உருவாகும் ஒரு புது படத்திலும் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். அதை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்குகிறார்.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் ஒரு குழந்தையை கையில் தூக்கி வைத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
அயலான் படத்தை இயக்கி வரும் ரவிக்குமாரின் மகள் தான் அந்த குழந்தை என்பது குறிப்பிடத்தக்கது.


