மோடியுடன் கேஷுவல் ஆக சிரித்து பேசிய சிவகார்த்திகேயன்! வைரலாகும் புகைப்படங்கள்
சமீபத்தில் ரிலீஸ் ஆகி இருந்த பராசக்தி படத்திற்கு கலவையான ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது. இரண்டு நாட்களில் 50 கோடிக்கும் மேல் வசூல் வந்திருப்பதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்து இருந்தது.
அடுத்து பொங்கல் விடுமுறையில் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பு ஒருபக்கம் இருக்க தற்போது பராசக்தி படக்குழு பாஜக பிரபலங்கள் உடன் இருக்கும் புகைப்படம் வைரல் ஆகி இருக்கிறது.

பொங்கல்
மத்திய அமைச்சர் எல்.முருகன் வீட்டில் நடந்த பொங்கல் கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அதில் கெஸ்ட் ஆக பராசக்தி டீம் அழைக்கப்பட்டு இருக்கிறது. சிவகார்த்திகேயன் அவரது மனைவி ஆர்த்தி உடன் சென்று இருக்கிறார். மேலும் ரவி மோகன், ஜீ.வி.பிரகாஷ் உள்ளிட்டோரும் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கின்றனர்.
சிவகார்திகேயன் பிரதமர் மோடி உடன் கேஸுவல் ஆக சிரித்து பேசி இருக்கும் புகைப்படமும் வைரல் ஆகி இருக்கிறது.

