விஜய்யின் ரூட்டை பின்பற்றும் சிவகார்த்திகேயன்.. லேட்டஸ்ட் தகவல்
லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் மீண்டும் கூட்டணி சேர்ந்து இருக்கும் லியோ படத்தின் இரண்டாம் கட்ட ஷூட்டிங் காஷ்மீரில் நடந்து வந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு அது நிறைவு பெற்றது.
கடும் குளிரில் கடந்த ஒரு மாதமாக ஷூட்டிங் நடத்தி வந்த லியோ டீம் நேற்று முன்தினம் சென்னைக்கு திரும்பியது.
காஷ்மீர் செல்லும் சிவகார்த்திகேயன்?
இந்நிலையில் விஜய்யை தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயன் அடுத்து காஷ்மீரில் ஷூட்டிங் செல்ல இருக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் SK21 படத்தின் ஷூட்டிங் தான் காஷ்மீரில் நடைபெற இருக்கிறது. அதற்கான லொகேஷன் பார்க்கும் பணிகளில் இயக்குனர் தற்போது ஈடுபட்டு இருக்கிறாராம்.
வரும் மே மாதத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் டீம் காஷ்மீரில் படப்பிடிப்பு நடத்த இருக்கிறது. அந்த படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடிக்கிறார் எனவும் கூறப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தந்தை இறந்த சோகத்திலும் அஜித் செய்த விஷயம்.. பாராட்டிய நடிகர் பார்த்திபன்