இரவு 12 மணிக்கு ரூம் கதவை தட்டிய ரஜினி.. சிகரெட் அடித்துக்கொண்டே செய்த விஷயம்..
ரஜினி
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும், நடிகர் சிவகுமாரும் மிகவும் நெருக்கமானவர்கள் என்பதை நாம் அறிவோம். நடிகரும், சூர்யாவின் தந்தையுமான சிவகுமார் மேடை ஒன்றில் ரஜினிகாந்த் குறித்து பேசிய விஷயம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதை பற்றி பார்க்கலாம் வாங்க.
ரகசியத்தை கூறிய சிவகுமார்
அவர் கூறியதாவது "ரஜினிகாந்த் சினிமா கல்லூரியில் படித்தார். அந்த சமயத்தில் ஒரு நிகழ்ச்சிக்காக இயக்குநர் கே. பாலச்சந்தர் அங்கு சென்றிருந்தார். அப்போது பாலச்சந்திரத்திரம், ரஜினிகாந்த் கேள்வி கேட்டார். 'ஒரு நடிகரிடம் நடிப்பை தவிர்த்து வேறு என்ன எதிர்பார்க்கிறீர்கள்' என கேட்டார். இதற்கு 'நடிகன் எப்போதும் வெளியே நடிக்கக்கூடாது' என பதில் அளித்தார்.
அங்கிருந்து புறம்படும் போது ரஜினிகாந்திடம் அவர், 'நாளை என் அலுவலத்துக்கு வா' என கூறினார். அதன்படியே, ரஜினி பாலசந்தர் அலுவலத்துக்கு சென்றார். அப்போது ரஜினியிடம் எதாவது நடித்து காமி என கே. பாலசந்தர் கூற, ரஜினியோ சிவாஜியின் கட்டபொம்மன் திரைப்பட வசனத்தை பேசி காண்பித்தார். 'அதான் சிவாஜி ஒருவர் ஏற்கனவே இருக்கிறாரே. அவர் மாதிரி நீ ஏன் செய்கிறாய்? நீ சொந்தமாக நடித்து காமி' என கூறினார்.
அதன்பின் ரஜினிகாந்தும் சற்று வித்தியாசமாக நடித்தார். அதில் ஈர்க்கப்பட்ட பாலசந்தர் 'நீ எதுவாக நடிக்க ஆசைப்படுகிறாய்' என கேட்க, 'வில்லனாக நடிக்க வேண்டும், அப்போது தான் நடிப்பில் வெரைட்டி காமிக்க முடியும்' என ரஜினிகாந்த் கூறினார்.
அதன்பின் அபூர்வ ராகங்கள், மூன்று முடிச்சு, அவர்கள் ஆகிய படங்களில் ரஜினி புக் செய்யப்பட்டார். மூன்று முடிச்சு படப்பிடிப்பின்போது, பாலச்சந்தருக்கு ஷர்மா என்கிற உதவி இயக்குநர் இருந்தார். அவரது ரூமும் ரஜினியின் ரூமும் பக்கம் தான்.
இரவு 12 மணிக்கு சிகரெட் ஆடிக்கொண்டே, ஷர்மா ரூமின் கதவை தட்டி, இந்த கதாபாத்திரத்திற்கு நான் தாங்குவேனா என கேட்டுக்கொண்டே இருந்தாராம். அந்த அளவிற்கு ரஜினிக்கு நடுக்கம். அப்போதுதான் அவர் சிகரெட் அடிக்கும் ஸ்டைல் அவர்களால் கவனிக்கப்பட்டது.
பாலச்சந்தர் மறுநாள் கூப்பிட்டு சிகரெட்டை எவ்வளவு வித்தியாசமாக பிடிக்க முடியுமோ பிடித்துகாமி என சொல்ல, ரஜினியும் பல விதங்களில் சிகரெட்டை ஸ்டைலாக பிடித்தார். அந்த ஸ்டைல்களை எல்லாம் பாலச்சந்தர் தனது படங்களில் பயன்படுத்தி கொண்டார்" என கூறியுள்ளார்.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக கூலி திரைப்படம் வெளிவரவுள்ளது. அதை தொடர்ந்து தற்போது ஜெயிலர் 2 திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.