சின்னத்திரையில் எவரும் செய்திராத சாதனையை படைத்த சிவாங்கி, 40 லட்சமா!
சின்னத்திரையில் மிகவும் பிரபலமான ஒரு நட்சத்திரம் சிவாங்கி, இவருக்கென்ற ஒரு தனி ரசிகர்கள் வட்டம் உள்ளது.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த சிவாங்கி, பின்னர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பெரியளவில் பிரபலமானார்.
மேலும் தற்போது இவர் சிவகார்த்திகேயனின் டான் திரைப்படத்தின் மூலம் பெரிய திரையிலும் அறிமுகமாக உள்ளார் சிவாங்கி.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் கலக்கி வரும் சிவாங்கி இன்ஸ்டாகிராமில் பெரிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
ஆம், சிவாங்கி இன்ஸ்டாகிராமில் 4 மில்லியன் பாலோவர்ஸ்களை பெற்றுள்ளார். அதாவது, 40 லட்சம் பேர் அவரை இன்ஸ்டாகிராமில் பின் தொடருகின்றனர். இதற்காக, சிவாங்கிக்கு பலரும் வாழ்த்து கூறிவருகின்றனர்.