இது நடந்திருந்தால் ஒரு வேலை புனீத் உயிருடன் இருத்துருப்பார்.. அண்ணன் சிவராஜ்குமார் உருக்கம்
கன்னட திரையுலகில் சூப்பர் ஸ்டார் எனும் அந்தஸ்தில் கொண்டாடப்பட்டவர் நடிகர் புனீத் ராஜ்குமார்.
இவர், தீடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக சமீபத்தில் உயிரிழந்தார். இவருடைய இழப்பு அனைவரையும் உலுக்கியது.
மரணத்திற்கும் பின்பு தனது கண்களை தானமாக கொடுத்து, 4 பேர் பார்வை பெற உதவினார்.
இந்நிலையில் 'நடிகர் புனீத் ராஜ்குமாருக்கு மாரடைப்பு ஏற்பட்ட போது, அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல, 35 நிமிடம் ஆனாது.
ஆனால் அருகில், 5 நிமிடத்தில் செல்ல கூடிய, மருத்துவமனையை நாங்கள் தவறவிட்டு, வேறொரு மருத்துவமனைக்கு புனீத்தை கொண்டு சென்றோம்.
அப்படி மட்டும் நடக்காமல், இருந்திருந்தால் ஒரு வேலை புனீத் தற்போது உயிருடன் இருந்திருப்பார்' என்று, புனீத் ராஜ்குமாரின் அண்ணன் சிவராஜ்குமார் கூறியதாக பிரபல பத்திரிகையாளர் ஒருவர் பதிவு செய்துள்ளார்.