சினிமாவில் ரெட் கார்ட் வாங்கினாரா எஸ். ஜே சூர்யா?.. வெளியான அதிர்ச்சி தகவல்
இயக்குனர், நடிகர் என இரண்டிலும் மாஸ் காட்டி வருபவர் தான் எஸ்.ஜே சூர்யா. இவர் அஜித் நடிப்பில் 1999-ம் ஆண்டு வெளியான வாலி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார்.
தற்போது இவர் நடிப்பில் முழு கவனம் செலுத்தி வருகிறார்.

ரெட் கார்ட்
எஸ்.ஜே சூர்யா பல வருடங்களுக்கு முன்பு ஞான வேல் ராஜாவிடம் படம் பண்ணி தருவதாக கூறி அவரிடம் இருந்து அட்வான்ஸ் வாங்கியுள்ளார்.
ஆனால் சில காரணங்களால் அந்த படத்தை இயக்க முடியாமல் போய்விட்டது. அதனால் அப்போதே எஸ்.ஜே சூர்யா வாங்கிய அட்வான்ஸ் பணத்தை திருப்பி கொடுக்க முன்வந்துள்ளார்.
அப்போது ஞான வேல் பணத்தை வாங்காமல் அதற்கு பதிலாக படத்தில் நடிக்க கூறியுள்ளார். தற்போது எஸ்.ஜே சூர்யா டாப் ஹீரோவாக வலம் வரும் நிலையில் கேட்கும் சம்பளத்தை ஞான வேல் கொடுக்க மறுக்கிறாராம்.
மேலும் அட்வான்ஸ் பணத்தை திருப்பி கொடுத்தால் வட்டியுடன் கேட்கிறாராம். இந்த பிரச்சனையால் எஸ்.ஜே சூர்யாவிற்கு ரெட் கார்ட் கொடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரவில்லை.

குழந்தையுடன் நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன்.. வெளிவந்த புகைப்படம்
வெனிசுலாவைத் தொடர்ந்து... நாடொன்றின் மீது திடீர் இராணுவ நடவடிக்கைக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri
பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து வெளியேறிய லட்சுமி ப்ரியா - இன்ஸ்டா ஸ்டோரியில் போட்ட பதிவு வைரல்! Manithan