விக்ரம் அதை பார்த்து மிரண்டு விட்டார்.. எஸ்.ஜே. சூர்யா சொன்ன சீக்ரெட்!
எஸ்.ஜே. சூர்யா
தமிழ் சினிமாவில் வில்லன் என்றால் தற்போது உடனடியாக அனைவருக்கும் நினைவிற்கு வரும் ஒரே நடிகர் நடிப்பு அரக்கன் என ரசிகர்களால் கொண்டாப்பட்டு வரும் எஸ்.ஜே. சூர்யா தான்.
மாநாடு, மார்க் ஆண்டனி சமீபத்தில் வெளிவந்த ராயன் என நடிப்பில் வேற லெவலுக்கு சென்று கொண்டு இருக்கிறார். இவருடைய வசனம் பேசும் விதம், அடாவடியான நடிப்பு, அதனுடன் சேர்ந்து வரும் நகைச்சுவை என அனைத்துமே மக்களை கவர்ந்துவிட்டது.
தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு ஆகிய மொழி திரைப்படங்களில் வில்லனாக கமிட் ஆகியுள்ளார். தற்போது, வீர தீர சூரன் படத்தில் நடித்துள்ள இவர், நிகழ்ச்சி ஒன்றில் இந்த படம் குறித்தும் படத்தின் கதாநாயகன் விக்ரம் குறித்தும் பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சீக்ரெட்
அதில், "படத்தின் டப்பிங் பணியின் போது விக்ரம் சார் என்னை பார்த்து மிரண்டு போயிவிட்டார். நடிப்பு என்பது ஒரு விஷயம். ஸ்டார் என்பது ஒரு விஷயம். ஆக்டிங்கையும், ஸ்டார்டமையும் லிங்க் செய்து கையில் வைத்திருக்கும் மிகச்சிறந்த நபர்தான் விக்ரம்.
அந்நியன், ஐ போன்ற சிறந்த படங்களை கொடுத்த விக்ரம் நடிப்பில் வரும் இந்த படமும் கண்டிப்பாக மக்களுக்கு பிடித்த படமாக அமையும். இந்த படம் ஒரு வித்தியாசமான அனுபவத்தை தரும்" என்று தெரிவித்துள்ளார்.