ஒரு படத்திற்காக இரு முறை கைது செய்யப்பட்ட எஸ்.ஜே. சூர்யா.. இப்படியொரு நிலைமையா
எஸ்.ஜே. சூர்யா
வாலி, குஷி இரு சூப்பர்ஹிட் படங்களுக்கு பின் எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் தமிழில் வெளிவந்த திரைப்படம் நியூ. இப்படத்தில் அவரே ஹீரோவாக நடித்து ஒரு ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
ஏகப்பட்ட அடல்ட் காட்சிகள் நிறைந்திருந்த இப்படத்தை சென்சாரில் பார்த்த பெண் அதிகாரி ஒருவர் இப்படத்திற்கு U சான்றிதழும் இல்லை, U/A சான்றிதழும் இல்லை என்று கூறிவிட்டு, எஸ்.ஜே. சூர்யாவை தரைகுறைவாக பேசினாராம்.
இரு முறை கைது
இதனால் கோபமடைந்த எஸ்.ஜே. சூர்யா தனது கையில் இருந்து செல் போனை அந்த அதிகாரியின் மீது தூக்கி எறிந்துள்ளார். இதன்பின் எஸ்.ஜே. சூர்யா மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட எஸ்.ஜே. சூர்யா பின், ஜாமில் வெளியே வந்துள்ளார்.
இதன்பின் நியூ படத்தில் இடம்பெறும் சிம்ரனுக்கும், எஸ்.ஜே. சூர்யாவிற்குமான நெருக்கமான காட்சிகளின் போஸ்டர்கள் சென்னையில் பல இடங்களில் ஒட்டப்பட்டுள்ளது.
இவை தடை செய்யப்பட்ட காட்சிகளின் போஸ்டர் என்பதால் மீண்டும் எஸ்.ஜே. சூர்யா மீது வழக்கு தொடரப்பட்டு கைதாகியுள்ளார். அதன்பின் ஜாமில் வெளியே வந்துள்ளாராம். எப்படி ஒரே ஒரு படத்திற்காக இரு முறை கைது செய்யப்பட்டுள்ளார் எஸ்.ஜே. சூர்யா.
தனுஷ் பட நடிகைக்கு திருமணம் முடிந்தது.. மாப்பிள்ளை யார் தெரியுமா

பாகிஸ்தானின் ஒற்றை முடிவு... இந்தியாவின் Air India நிறுவனத்திற்கு பல ஆயிரம் கோடிகள் இழப்பு News Lankasri
