ஏ.ஆர் முருகதாஸ் உட்பட 7 உதவி இயக்குனர்களுக்கு இப்படி ஒரு விஷயத்தை வாங்கி கொடுத்தாரா எஸ்.ஜே சூர்யா! என்னவென்று தெரியுமா

By Kathick Jun 09, 2023 10:00 AM GMT
Report

எஸ்.ஜே சூர்யா

தமிழ் திரையுலகில் இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என அனைத்திலும் கில்லியாக இருப்பவர் எஸ்.ஜே சூர்யா. இவர் திரைத்துறையில் உதவி இயக்குனராக அறிமுகமானர்.

இவர் பல இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். பின்பு இவர் இயக்கிய இரு திரைப்படங்கள் "குஷி" மற்றும் "வாலி" மெகா ஹிட் ஆனது. இதனைத்தொடர்ந்து "நியூ" திரைப்படத்தின் மூலம் தன்னை ஹீரோவாக அறிமுகப்படுத்தி கொண்டார்.

ஏ.ஆர் முருகதாஸ் உட்பட 7 உதவி இயக்குனர்களுக்கு இப்படி ஒரு விஷயத்தை வாங்கி கொடுத்தாரா எஸ்.ஜே சூர்யா! என்னவென்று தெரியுமா | Sj Surya Gifted This To 7 Assistent Directors

அதன் பிறகு ஹீரோ, வில்லன், குணசித்திர கதாபாத்திரம் என அனைத்திலும் மிரட்டலான தனது நடிப்பு வெளிப்படுத்தியுள்ளார். இவர் தற்போது ராதா மோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள "பொம்மை" படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் ஜூன் 16ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இதற்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் எஸ்.ஜே. சூர்யா கலந்து கொண்டு வருகிறார். அந்த வகையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எஸ்.ஜே சூர்யாவை பற்றிய பேச அவரின் நெருங்கிய நண்பரும் பிரபல நடிகருமான மாரிமுத்து வந்திருந்தார்.

எஸ்.ஜே சூர்யா வாங்கி கொடுத்த பரிசு

அதில் பேசிய மாரிமுத்து, "நானும் எஸ்.ஜே சூர்யாவும் முதலில் இயக்குனர் வசந்த்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தோம். அதன் பின் எஸ்.ஜே சூர்யா இயக்கத்தில் உருவான "குஷி" படத்தில் நான் உதவி இயக்குனராக பணிபுரிந்தேன். அப்போது "குஷி" படத்திற்காக அவர் சில லட்சங்களை அட்வான்ஸாக பெற்றார்".

ஏ.ஆர் முருகதாஸ் உட்பட 7 உதவி இயக்குனர்களுக்கு இப்படி ஒரு விஷயத்தை வாங்கி கொடுத்தாரா எஸ்.ஜே சூர்யா! என்னவென்று தெரியுமா | Sj Surya Gifted This To 7 Assistent Directors

"அந்த பணத்தை வைத்து அவரின் உதவியாளர் 7 பேருக்கு பைக் வாங்கி கொடுத்துள்ளார். நானாக இருந்திருந்தால் அந்த பணத்தை வீட்டில் வைத்திருப்பேன். ஆனால் எஸ்.ஜே சூர்யா ஏ.ஆர் முருகதாஸ் உட்பட மொத்தம் 7 உதவி இயக்குனருக்கு பைக் வாங்கி கொடுத்தார்" என தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் கலக்கி கொண்டிருக்கும் பிரபல நடிகரின் சிறுவயது போட்டோ- யார் தெரிகிறதா? 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US