54 வயதில் நடிகர் எஸ்.ஜே. சூர்யாவிற்கு திருமணம்.. குடும்பத்தினரின் முடிவு
எஸ்.ஜே. சூர்யா
தமிழ் திரையுலகில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் என பன்முக திறமைகொண்டவர் எஸ்.ஜே. சூர்யா.
வாலி, குஷி என இயக்குனராக சூப்பர்ஹிட் படங்களை கொடுத்து வந்த எஸ்.ஜே. சூர்யா, அதன்பின் நியூ, அன்பே ஆருயிரே படங்களின் மூலம் சிறந்த நடிகராகவும் வலம் வந்தார்.
இதன்பின் சில ஆண்டுகள் தமிழ் சினிமாவில் இருந்து விலகி இருந்த எஸ்.ஜே. சூர்யா, அதன்பின் இசை படத்தின் மூலம் கம் பேக் கொடுத்தார். தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிய துவங்கின.
ஹீரோவாக மட்டுமல்லாமல் ஸ்பைடர், மெர்சல், மாநாடு என பல படங்களில் வில்லனாகவும் மிரட்டி வருகிறார்.
திருமணம்
54 வயதாகும் நடிகர் எஸ்.ஜே. சூர்யா இதுவரை திருமணம் செய்துகொள்ளாமல் இருந்து வருகிறார். இந்நிலையில், நடிகர் எஸ்.ஜே. சூர்யாவிற்கு விரைவில் திருமணம் நடக்கவுள்ளதாம்.
இதற்காக மணப்பெண்ணை தீவீரமாக எஸ்.ஜே. சூர்யா குடும்பத்தினர் தேடி வருவதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், இதுகுறித்து எஸ்.ஜே. சூர்யா தரப்பில் இருந்து எந்த ஒரு அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.