நடிகர் எஸ்.ஜே. சூர்யாவின் முழு சொத்து மதிப்பு.. எவ்வளவுனு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க
வாலி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.ஜே. சூர்யா. இப்படத்தை தொடர்ந்து குஷி, நியூ, அன்பே ஆருயிரே போன்ற படங்களை இயக்கினார். இதில், நியூ படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானார்.
அன்பே ஆருயிரே படத்திற்கு பிறகு பல ஆண்டுகளுக்கு பின், இசை படத்தின் மூலம், ரீ என்ட்ரி கொடுத்து வெற்றிபெற்றார். இதன்பின், கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் வெளிவந்த இறைவி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் மனதிலும், சிறந்த நடிகர் என்று இடம் பிடித்தார்.
மேலும் ஸ்பைடர், மெர்சல், மான்ஸ்டர், நெஞ்சம் மறப்பதில்லை, என தனது நடிப்பினால் ரசிகர்களை அசரவைத்த எஸ்.ஜே. சூர்யா, சமீபத்தில் வெளிவந்த மாநாடு திரைப்படத்திலும் நடிப்பில் மிரட்டியெடுத்தார்.
சமீபகாலமாக திரை பிரபலங்களின் சொத்து மதிப்பு விவரங்கள் இணையத்தில் வெளியாகி வரும் நிலையில், எஸ்.ஜே. சூர்யாவின் சொத்து மதிப்பு குறித்தும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
அதன்படி, இயக்குனரும், நடிகருமான எஸ். ஜே. சூர்யாவின் முழு சொத்து மதிப்பு மட்டுமே சுமார் ரூ. 9 கோடி என தகவல் வெளியாகியுள்ளது. திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக இருக்கும் எஸ். ஜே. சூர்யாவின் சொத்து மதிப்பு ரூ. 9 கோடி தானா என பலரும் ஷாக் ஆகியுள்ளார்கள்.