வீர தீர சூரன் படத்திற்காக எஸ்.ஜே. சூர்யா வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா
எஸ்.ஜே. சூர்யா
தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன்கள் என பட்டியலிட்டால் அதில் டாப் 5ல் இடம்பிடித்துவிடுவார் நடிகர் எஸ்.ஜே. சூர்யா. இயக்குநராக தனது திரை பயணத்தை துவங்கிய இவர், இன்று சிறந்த வில்லன் நடிகராக கொடிகட்டி பறந்து வருகிறார்.
தனக்கு உரித்தான மிரட்டலான உடல்மொழி நடிப்பு பட்டையை கிளப்பி வரும் எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் வீர தீர சூரன்.
இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து எஸ்.ஜே. சூர்யா முதல் முறையாக நடித்திருந்தார். இப்படம் நான்கு நாட்களில் உலகளவில் ரூ. 27 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
எஸ்.ஜே. சூர்யா வாங்கிய சம்பளம்
இந்த நிலையில், வீர தீர சூரன் திரைப்படத்தில் நடிப்பதற்காக நடிகர் எஸ்.ஜே. சூர்யா வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படத்தில் நடிக்க ரூ. 2 கோடி சம்பளமாக எஸ்.ஜே. சூர்யா வாங்கியுள்ளார் என சொல்லப்படுகிறது. ஆனால், இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கம், வெள்ளி நகைகளை ஏன் பிங்க் நிற பேப்பரில் சுற்றி தருகிறார்கள்? பலருக்கும் தெரியாத ரகசியம்! Manithan

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

கிட்னிகள் ஜாக்கிரதை பேட்ஜை அணிந்து வந்த அதிமுக எம்எல்ஏக்கள் - சட்டமன்றத்தில் சலசலப்பு! IBC Tamilnadu
