விக்ரமிற்கு வில்லனாகும் நடிப்பு அரக்கன்.. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் சீயான் 62

By Kathick Feb 10, 2024 08:40 AM GMT
Report

விக்ரம் தற்போது தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ரசிகர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படங்களில் தங்கலானும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

விக்ரமிற்கு வில்லனாகும் நடிப்பு அரக்கன்.. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் சீயான் 62 | Sj Surya To Act With Vikram In Chiyaan 62

சீயான் 62

இதையடுத்து விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் சீயான் 62. இப்படத்தை அருண் குமார் இயக்கி வருகிறார். இவர் கடந்த ஆண்டு வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்த சித்தா படத்தை இயக்கியிருந்தார்.

விக்ரமிற்கு வில்லனாகும் நடிப்பு அரக்கன்.. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் சீயான் 62 | Sj Surya To Act With Vikram In Chiyaan 62

விவாகரத்தில் முடிந்த திருமணம்! வாரிசு நடிகருடன் புதிய காதல்.. சமந்தாவின் இரண்டாம் திருமணத்திற்கு மாப்பிளை ரெடி

விவாகரத்தில் முடிந்த திருமணம்! வாரிசு நடிகருடன் புதிய காதல்.. சமந்தாவின் இரண்டாம் திருமணத்திற்கு மாப்பிளை ரெடி

இப்படத்தின் அறிவிப்பு வீடியோ கூட வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சீயான் 62 படம் குறித்து செம மாஸ் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

செம மாஸ் காம்போ

அதன்படி, இப்படத்தில் விக்ரமிற்கு வில்லனாக எஸ்.ஜே. சூர்யா நடித்து வருகிறாராம். தமிழ் சினிமாவில் தற்போது நடிப்பு அரக்கன் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் எஸ்.ஜே. சூர்யா ஒரு புறமும், நடிப்பு என்று வந்துவிட்டால் எதை வேண்டுமானலும் செய்ய துணிந்து நிற்கும் விக்ரம் மறுபுறமும் இப்படத்தில் இணைந்துள்ளனர்.

விக்ரமிற்கு வில்லனாகும் நடிப்பு அரக்கன்.. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் சீயான் 62 | Sj Surya To Act With Vikram In Chiyaan 62

இதனால் சீயான் 62 படத்தின் மீது அளவுகடந்த எதிர்பார்ப்பு வந்துள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் முதல் முறையாக இணைந்துள்ள இந்த கம்போ, எந்த அளவிற்கு மக்களிடம் வரவேற்பை பெறப்போகிறது என்று.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US