தளபதி 68ல் விஜய்க்கு இரண்டு வில்லன்களா? மைக் மோகனுடன் இணைந்த வெறித்தனமான நடிகர்
தளபதி 68
தளபதி விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
முதற்கட்ட படப்பிடிப்பு பாடல் காட்சியுடன் ஆரம்பித்த நிலையில் தற்போது இரண்டாம்கட்ட படப்பிடிப்பில் சண்டை காட்சிகளை எடுத்து வருகிறார்களாம்.

பிகில் படத்திற்கு பின் மீண்டும் விஜய்யை வைத்து தளபதி 68 படத்தை ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்திற்காக நடிகர் விஜய் ரூ. 200 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என கூறப்படுகிறது.
இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து சினேகா, லைலா, பிரஷாந்த், மைக் மோகன், பிரபு தேவா, அஜ்மல், மீனாட்சி சவுத்ரி என பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

இதில் நடிகர் மைக் மோகன் தான் விஜய்க்கு வில்லனாக நடிக்கிறார் என கூறப்படுகிறது. இந்த வில்லன் லிஸ்டில் புதிதாக ஒரு நடிகரும் இணைந்துள்ளாராம்.
இரண்டு வில்லன்களா
அவர் வேறு யாருமில்லை நடிகரும், இயக்குனருமான எஸ்.ஜே. சூர்யா தான். சமீபகாலமாக வில்லன் கதாபாத்திரத்தில் வெறித்தனமாக கலக்கி வரும் எஸ்.ஜே. சூர்யா தளபதி 68ல் நடிக்க கமிட் ஆகியுள்ளாராம்.
மாநாடு படத்தை தொடர்ந்து மீண்டும் வெங்கட் பிரபு இயக்கும் தளபதி 68ல் எஸ்.ஜே. சூர்யா இணைந்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் எஸ்.ஜே. சூர்யா நடிப்பதாக கூறப்படுகிறது.

ஆனால், ரசிகர்கள் அவர் வில்லனாக தான் நடிக்கிறார் என சமூக வலைத்தளத்தில் கூறி வருகிறார்கள். விரைவில் இதுகுறித்து படக்குழுவிடம் இருந்து அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரூ.1.5 கோடி மதிப்பிலான குடியிருப்பு: பென்சிலால் துளையிட்ட நபர்: அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி News Lankasri