பாலிவுட் பாட்ஷாவுடன் இணையும் நடிப்பு அரக்கன் எஸ்.ஜே. சூர்யா.. வெறித்தனமான காம்போ
எஸ்.ஜே. சூர்யா
தற்போது தமிழ் சினிமாவில் வில்லன் என்றால் உடனடியாக அனைவருக்கும் நினைவிற்கு வரும் ஒரே நடிகர் நடிப்பு அரக்கன் என ரசிகர்களால் கொண்டாப்பட்டு வரும் எஸ்.ஜே. சூர்யா தான். மாநாடு, மார்க் ஆண்டனி சமீபத்தில் வெளிவந்த ராயன் என நடிப்பில் வேற லெவலுக்கு சென்று கொண்டு இருக்கிறார்.
இவருடைய வசனம் பேசும் விதம், அடாவடியான நடிப்பு, அதனுடன் சேர்ந்து வரும் நகைச்சுவை என அனைத்துமே மக்களை கவர்ந்துவிட்டது. தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு ஆகிய மொழி திரைப்படங்களில் வில்லனாக படங்களில் கமிட் ஆகியுள்ளார்.
பாலிவுட் பாட்ஷாவுடன் கூட்டணி
இந்த நிலையில், தென்னிந்தியாவை தாண்டி அடுத்ததாக பாலிவுட் பக்கமும் கால்பதிக்கவுள்ளார் எஸ்.ஜே. சூர்யா. பாலிவுட் சினிமாவில் ரசிகர்களால் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடப்பட்டு வருபவர் பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான்.
இவருடைய நடிப்பில் அடுத்ததாக உருவாகவுள்ள திரைப்படம் கிங். இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் எஸ்.ஜே. சூர்யா நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால், இதுவரை இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா நடிக்கப்போகிறார் என்பது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரும் இணைந்து நடித்தால் கண்டிப்பாக அது வெறித்தனமான காம்போவாக அமையும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
