வெறித்தனமான தலைப்புடன் மீண்டும் இயக்குனராக அறிமுகமாகும் எஸ்.ஜே. சூர்யா.. காத்திருக்கும் ரசிகர்கள்
எஸ்.ஜே. சூர்யா
அஜித் நடிப்பில் வெளிவந்த வாலி எனும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.ஜே. சூர்யா. இதன்பின் விஜய்யை வைத்து குஷி எனும் படத்தை இயக்கினார்.

இந்த இரண்டு திரைப்படங்களும் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது. இதன்பின் பல படங்களை இயக்கிய எஸ்.ஜே. சூர்யா, சில ஆண்டுகள் இடைவேளைக்கு பின் மீண்டும் இசை படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார்.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகராக மட்டுமே எஸ். ஜே. சூர்யாவை திரையில் பார்த்துவருகிறோம்.
மீண்டும் இயக்குனராக
இந்நிலையில், மீண்டும் இயக்குனராக புதிய படத்தை இயக்கவுள்ளாராம் எஸ்.ஜே. சூர்யா. இப்படத்திற்கு கில்லர் எனும் தலைப்பு வைத்திருப்பதாகவும்.
இப்படத்தில் உருவாக்கியுள்ள கதாநாயகி கதாபாத்திரம் மிக அருமையாக இருக்கிறது என்று பேட்டியில் தெரிவித்துள்ளார்.