எல்லா நல்ல கதையும் என்கிட்டயே வருதே.. இது மாநாடு 2: SJ சூர்யா சூப்பர் அப்டேட்
வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த மாநாடு படம் பெரிய ஹிட். டைம் லூப் கதை அடிப்படையில் உருவாகி இருந்த இந்த படத்தில் சிம்புவுக்கு வில்லனாக எஸ்ஜே சூர்யா நடித்து இருந்தார்.
தற்போது எஸ்ஜே சூர்யா அதே போன்ற ஒரு சூப்பரான கதை உள்ள ஒரு படத்தில் நடிக்கும் வாய்ப்பு தனக்கு கிடைத்து இருப்பதாக தெரிவித்து உள்ளார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் அந்த படத்தில் விஷால் நடிக்க உள்ளார்.
இது பற்றி பதிவிட்டு இருக்கும் எஸ்ஜே சூர்யா.
"ஓ காட்.. எல்லா நல்ல கதையும் என்கிட்டயே அனுப்புறியே.. இயக்குனர் ஆதிக் ரவி சமீபத்தில் சொன்ன கதை கேட்டு வியந்து போனேன். இதை மாநாடு 2னு சொல்லனும். அப்படி ஒரு ஸ்க்ரீன்ப்ளே" என எஸ்ஜே சூர்யா குறிப்பிட்டு இருக்கிறார்.
OHHH🙏GOD YELLA NALLA KADHYAYUM YENKITTAYE ANUPRIYEEE🥰🙏🙏🙏🥰I AM AMAZED WITH DIR @Adhikravi ‘s RECENT NARRATION🥰WOW🥰WHAT A NARRATION 🥰🥰SURE SHOT👍IDHA MAANAADU 2 NU SOLLALAM👍👍APDI ORU SCREENPLAY 👍👍👍THIS TOO WILL GO BEYOND BORDERS 💐🙏to @VishalKOfficial & @vinod_offl
— S J Suryah (@iam_SJSuryah) January 1, 2022