சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகவும் விஜய் பட நடிகர்.. ஏ.ஆர். முருகதாஸ் போட்ட பிளான்

Kathick
in பிரபலங்கள்Report this article
எஸ்.கே. 23
முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் சமீபத்தில் தான் தனது அமரன் திரைப்படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்தார். ராஜ்குமார் பெரியாசாமி இயக்கி வரும் இப்படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்து வரும் திரைப்படம் தான் எஸ்.கே. 23. இப்படத்தை முன்னணி இயக்குனரான ஏ.ஆர். முருகதாஸ் இயக்கி வருகிறார். பெரிதும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தில் கன்னட சென்சேஷனல் நடிகை ருக்மிணி கதாநாயகியாக நடித்து வருகிறார்.
வில்லன் இவர் தான்
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் வில்லன் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. எஸ்.கே. 23 திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடித்து வருகிறாராம்.
சிவகார்த்திகேயனுக்கும் சஞ்சய் தத்க்கும் இடையே நடக்கும் காட்சிகள் தான் தற்போது படமாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சஞ்சய் தத் கடைசியாக விஜய்யுடன் இணைந்து லியோ திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.