சிவகார்த்திகேயனின் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா

Kathick
in திரைப்படம்Report this article
சிவகார்த்திகேயன்
அமரன் படத்திற்கு பின் சிவகார்த்திகேயனின் திரை வாழ்க்கை வேற லெவலில் மாறிவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். இப்படம் ரூ. 340 கோடிக்கும் மேல் வசூல் செய்து, கடந்த ஆண்டு அதிகம் வசூல் செய்த தமிழ் திரைப்படங்களில் இரண்டாவது இடத்தை பிடித்தது.
அடுத்ததாக சிவகார்த்திகேயன் கைவசம் இரண்டு படங்கள் உள்ளன. ஒன்று ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் எஸ்கே 23. மற்றொன்று சுதா கொங்கரா இயக்கி வரும் பராசக்தி.
இதில் சமீபத்தில் பராசக்தி படத்தின் டைட்டில் டீசர் வெளிவந்து ரசிகர்கள் அனைவரும் சர்ப்ரைஸ் கொடுத்த நிலையில், அடுத்ததாக எஸ்கே 23 படம் தயாராகியுள்ளது.
ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்
ஆம், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், விக்ராந்த், ருக்மிணி வசந்த், வித்யுத் ஜாம்வல் ஆகியோர் இணைந்து நடித்து வரும் எஸ்கே 23 படத்தின் டைட்டில் டீசர் வெளிவரவுள்ளது.
அதுவும், சிவகார்த்திகேயனின் பிறந்தநாளான பிப்ரவரி 17ம் தேதி ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் வகையில், இப்படத்தின் டைட்டில் டீசரை படக்குழு வெளியிடவுள்ளதாக தகவல் கூறப்படுகிறது.