SK 20 தொடர்ந்து சிவகார்த்திகேயனின் அடுத்தடுத்த திரைப்படங்களின் லைன் அப்! பிளாக் பஸ்டர் கூட்டணி..
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் சிவகார்த்திகேயன் டாக்டர் திரைப்படம் கடைசியாக வெளியாகி ரூ.100 கோடியளவில் வசூல் சாதனை படைத்தது.
அதனை தொடர்ந்து இவர் நடிப்பில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள டான் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
இதனிடையே இன்று இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் SK 20 படத்தின் பூஜை நடைபெற்றது, காரைக்குடியில் நடந்த இந்த பூஜையில் சிவகார்த்திகேயனும் கலந்து கொண்டுள்ளார்.
அதன்பின் கமல் மற்றும் சோனி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இப்படங்களுக்கு பின் ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.