எதிர்பார்ப்பை எகிற வைக்கும் SK23.. அப்டேட் கொடுத்த ஏ. ஆர் முருகதாஸ்!!
ஏ.ஆர் முருகதாஸ்
தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்திருக்கும் இயக்குனர் ஏ. ஆர் முருகதாஸ், தற்போது சிவகார்த்திகேயன் உடன் கூட்டணி வைத்திருக்கிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக SK23 என்று தலைப்பு வைத்துள்ளனர்.
இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கன்னட நடிகை ருக்குமணி நடிக்கிறார். நேற்று இந்த படத்தின் பூஜை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
அப்டேட்
இந்நிலையில் ஏ. ஆர் முருகதாஸ் SK23 திரைப்படம் குறித்து பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர், "SK23 பாஸ்ட் பேஸ்ட் ஆக்ஷன் படமாக உருவாகிறது. கஜினி படம் போன்று இப்படமும் சுவாரசியமான திரைக்கதையில் இருக்கும்".
"இப்படத்தில் புதிய கதைக்களத்துடன் ரொமான்ஸ் காட்சிகளும் இடம் பெற்று இருக்கும். மேலும், இப்படத்தில் வரும் கதாபாத்திரத்திற்காக சிவகார்த்திகேயன் தன்னை தயார்படுத்தி வருகின்றார்" என்று ஏ. ஆர் முருகதாஸ் கூறியுள்ளார்.