பிக்பாஸ் குரல் யார் என்று தெரியும், குட்டி வீட்டில் பேசும் பிக்பாஸ் யார் என்று தெரியுமா?- யார் பாருங்க
பிக்பாஸ் 7
சமீபத்தில் கமல்ஹாசன் புதிய படம் குறித்து தகவல்களை ரசிகர்கள் கேட்க நினைத்தார்களோ இல்லையோ பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக அதிகம் ஆர்வம் காட்டி வந்தார்கள்.
அவர் தொகுத்து வழங்க அக்டோபர் 1ம் தேதி நிகழ்ச்சியும் வெற்றிகரமாக தொடங்கிவிட்டது.
இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு விஜய், ஜோவிகா எஸ் அனன்யா ராவ், ஐஷு, அக்ஷயா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றனர்.
நிகழ்ச்சிக்குள் நுழைந்த நாள் முதல் பிக்பாஸ் ஆக்டீவாக டாஸ்க் எல்லாம் கொடுத்து வருகிறார்.
சின்ன பிக்பாஸ்
இரண்டு வீடு, 18 போட்டியாளர்களுடன் தொடங்கி நிகழ்ச்சியில் முதல் நாளே நாமினேஷனில் அனன்யா, ஐசு, பவா செல்லதுரை, ரவீனா, ஜோவிகா, பிரதீப் ஆண்டனி, யோகேந்திரன் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றிருக்கின்றன.
7வது சீசன் வரை பிக்பாஸாக பேசி வருபவர் சாஷோ, இவர் குறித்த தகவல் வெளியாகவே பல வருடங்கள் ஆனது.
இந்த நிலையில் சின்ன வீட்டில் பிக்பாஸாக பேசும் பிரபலம் குறித்து தகவல் வந்துள்ளது. புதிய வீட்டில் பேசும் சின்ன பிக்பாஸ் என அழைக்கப்படும் அவரது பெயர் அரவிந்தன், சென்னையை சேர்ந்தவராம்.
தியேட்டர் ஆர்டிஸ்ட், கூத்து பட்டறையில் பயிற்சி பெற்றவர். சினிமாவில் முயற்சி செய்து வந்தவருக்கு இப்படியொரு வாய்ப்பு கிடைத்துள்ளது.