கடைசி வரை தற்கொலை செய்த நடிகை ஷோபாவை பார்க்கவே முடியவில்லை- வருத்தப்பட்ட நடிகை
பழம்பெரும் நடிகை
தமிழ் சினிமாவில் 80களில் கலக்கிக் கொண்டிருந்த நடிகைகள் பலர் இப்போதும் நடிக்கிறார்கள், சிலர் சினிமாவை விட்டு விலகி இருக்கிறார்கள்.
ஆனால் ஒரு நடிகையின் திடீர் மரணம் ரசிகர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது.
அவர் வேறுயாரும் இல்லை நடிகை ஷோபா தான். 1965ம் ஆண்டு வெளியான மலையாள படமான ஜீவித யாத்ரா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
3 வயதில் நடிக்க தொடங்கிய ஷோபா தொடர்ந்து மலையாள படங்களில் நடித்து அசத்தியிருந்தார். அப்படியே தமிழி சினிமா பக்கம் வந்தும் அசத்திய ஷோபா இயக்குனர் பாலு மகேந்திராவை 1978ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
ஆனால் 1980ம் ஆண்டு மே 1ம் தேதி திடீரென தற்கொலை செய்துகொண்டு இறந்தார்.

நடிகையின் வருத்தம்
அண்மையில் ஒரு பேட்டியில் நடிகை எஸ்.என். பார்வதி பேசும்போது, மறைந்த நடிகை ஷோபா எனக்கு மகள் போன்றவள் தான்.
ஒரு நாள் படப்பிடிப்பில் இருக்கும் போது ஷோபா தற்கொலை செய்துகொண்டார் என்றனர், அது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.
கடைசி வரை அவருடைய முகத்தை என்னால் பார்க்க முடியாமல் போய்விட்டது, அது எனக்கு மிகவும் வருத்தத்தை கொடுத்தது என பேசி வருந்தியுள்ளார்.

சிறுவயதில் செம கியூட்டாக இருக்கும் இந்த விஜய் டிவி பிரபலம் யார் என்று தெரிகிறதா?- அவர் இவர்தானா?
அதிகரிக்கும் சுவாசத் தொற்று.., மருத்துவமனைக்கு வரும் மக்கள் முகக்கவசம் அணிய அறிவுறுத்தல் IBC Tamilnadu