பிக்பாஸ் பிரபலத்தின் வீட்டில் திடீரென நுழைந்துள்ள பாம்பு- பதறிப்போன பிரபலம்
தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை ஆரம்பித்து பின் ஜெயா டிவியில் பல ஆண்டுகளாக பணியாற்றியவர் பாத்திமா பாபு.
பின் 1996ம் ஆண்டு பாலசந்தர் இயக்கிய கல்கி படததின் மூலம் நடிக்க தொடங்கிய அவர் தெலுங்கு, மலையாளம் என குணசித்திர வேடங்களில் நடித்து வந்தார். சீரியல்களிலும் நடித்துவந்த பாத்திமா பாபு பிக்பாஸ் 3வது சீசனில் கலந்து கொண்டார்.
பாத்திமாவிற்கு சொந்தமான வீடு ஒன்று சென்னை ஜயப்பன் தாங்கல் பத்மாவதி நகரில் உள்ளது. அதில் முதியவர்களை தங்கவைத்து முதியோர் இல்லம் போல் நடத்தி வருகிறார்.
அந்த வீட்டில் திடீரென பாம்பு நுழைய அங்கிருந்தவர்கள் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
அது சாரை பாம்பு என்றும் ஆறடி நீளம் கொண்டது என தெரிவித்துள்ளனர்.