சினிமாவில் நடக்கும் அதிக விவாகரத்து குறித்து சினேகா-பிரசன்னா கூறிய பதில்... என்ன சொன்னாங்க தெரியுமா?
சினேகா
நடிகை சினேகா, புன்னகை அரசியாக மக்கள் மனதில் நிலைத்து நிற்கும் ஒரு பிரபலம்.
கடைசியாக இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான கோட் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
அதன்பின் சினேகா எந்த படமும் கமிட்டாகவில்லை, தற்போது தனது சினேகாலயா புடவை கடையை பிரபலப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
விவாகரத்து
நட்சத்திர தம்பதியான சினேகா மற்றும் பிரசன்னா ஆகியோர் தங்களது ஆடை கடையின் ஆடைகளை கர்நாடக இசைக் கலைஞர்களுக்கு அணியக் கொடுத்து ஒய்யார நடை என்னும் ரேம்ப் வாக் விழாவினை நடத்தியுள்ளனர்.
அந்நிகழ்ச்சியின் போது பத்திரிக்கையாளர்களை சந்தித்த சினேகா-பிரசன்னாவிடம் நிறைய கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
அதில் பிரபலங்களின் அதிக விவாகரத்து குறித்து கேட்க, திரைத்துறையில் விவாகரத்து நடப்பதைத் தடுக்க அறிவுரை எல்லாம் சொல்ல முடியாதுங்க, எல்லோருக்கும் அவங்களுக்கு என்று ஒரு தனிப்பட்ட வாழ்க்கை இருக்கு. அதை நாம் மதிக்கணும் என கூறி முடித்துள்ளனர்.

அஜித் குமார் மரண வழக்கில் கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு News Lankasri

தோண்ட தோண்ட தங்கம்; பல ஆண்டுகளுக்குப் பிரச்சினை இல்லை - மிக பெரிய சுரங்கம் கண்டுபிடிப்பு IBC Tamilnadu
