மை லட்டு.. பிறந்தநாள் வாழ்த்து கூறி நடிகை சினேகா வெளியிட்ட வீடியோ, இதோ
சினேகா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் சினேகா. இவர் கடந்த 2013ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இந்த தம்பதிக்கு இரு பிள்ளைகள் உள்ளனர். அவ்வப்போது தனது குடும்பத்துடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள் அல்லது தன்னுடைய போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாவில் சினேகா வெளியிடுவார்.
இந்நிலையில், தற்போது தனது மகன் விஹானுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி புகைப்படங்கள் தொகுப்புடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சினேகா வெளியிட்ட அழகிய வீடியோ
இந்த வீடியோவில் 'மை லட்டு, உன்னை நான் எந்த அளவிற்கு நேசிக்கிறேன் என வார்த்தைகளில் அடக்க முடியாது. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்' என சினேகா கூறியுள்ளார்.
இந்த பதிவுக்கு நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார் மற்றும் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி ரவி தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை கமெண்டில் தெரிவித்துள்ளனர்.
இதோ பாருங்க..
காருக்குள் போட்டோஷூட்.. 38 வயதாகும் நடிகை நயன்தாரா கொடுத்த போஸ், வைரல் புகைப்படம்

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
