டான்ஸ் ஜோடி டான்ஸ் பிரபலத்தை வீட்டிற்கு அழைத்து அழ வைத்த சினேகா- என்ன ஆனது?
டான்ஸ் ஜோடி டான்ஸ்
தமிழ் சின்னத்திரையில் மிகவும் வெற்றிகரமாக ஓடும் நடன நிகழ்ச்சிகளில் பிரபலமாக ஓடுகிறது டான்ஸ் ஜோடி டான்ஸ்.
ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விருப்பமுள்ள அடிமட்டத்தில் இருக்கும் திறமைசாலிகள் கூட இதில் கலந்துகொண்டு பிரபலமாகி இருக்கிறார்கள்.
விஜய் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக சினேகா, பாபா மாஸ்டர், சங்கீதா ஆகியோர் உள்ளனர். வாரா வாரம் நிறைய டாஸ்க்குகள் கொடுக்க போட்டியாளர்களும் மாஸ் காட்டி வருகிறார்கள்.
சினேகாவின் நல்ல உள்ளம்
இந்த நிலையில் டான்ஸ் ஜோடி டான்ஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு ஏற்பட்டிருக்கிறது.
இந்நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் சுரேஷ் என்பவரை நடிகை சினேகா ஒரு நாள் என்னுடைய வீட்டுக்கு வாங்க என் கையாலேயே நான் சமைத்து சாப்பாடு தருகிறேன் என கூறியிருந்தார்.
அதன்படி தான் சொன்னதை மறந்துவிடாமல் சுரேஷை வீட்டிற்கு அழைத்து உணவு பரிமாறி தானே அவருக்கு ஊட்டியும் விட்டு மகிழ்ந்து இருக்கிறார். சினேகா தன்னுடைய கையால் சாப்பாடு ஊட்டியதும் கண் கலங்கிய சுரேஷுக்கு சினேகா சிரித்தப்படியே ஆறுதல் கூறியிருக்கிறார்.
இந்த க்யூட்டான வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.