சின்னத்திரை நடிகை மீது பிக் பாஸ் சினேகன் போலீசில் புகார்
சீரியல் நடிகை ஜெயலட்சுமி மீது கவிஞர் சினேகன் போலீஸ் புகார் அளித்து இருக்கிறார்.
சினேகன்
கவிஞர் என்பதை விட பிக் பாஸ் பிரபலம் என்று சொன்னால் உடனே எல்லோருக்கும் நினைவுக்கு வருபவர் சினேகன். அவர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியிலும் பொறுப்பில்இருந்து வருகிறார்.
அவர் பிரபல நடிகை கன்னிகா ரவியை கடந்த வருடம் காதல் திருமணம் செய்து கொண்டார். கமல்ஹாசன் தான் முன்னின்று திருமணத்தை நடத்தி வைத்தார்.
சீரியல் நடிகை ஜெயலக்ஷ்மி மோசடி
இந்நிலையில் சினேகன் நேற்று சென்னை போலீசிடம் புகார் ஒன்றை அளித்து இருக்கிறார். தான் 2015ல் இருந்து சினேகம் பவுண்டேஷன் என்கிற பெயரில் தொண்டு நிறுவனம் நடத்தி வருவதாகவும், அதன் பெயரை பயன்படுத்தி சீரியல் நடிகை ஜெயலட்சுமி மோசடி செய்து வருவதாகவும் புகார் தெரிவித்து இருக்கிறார்.
ஜெயலட்சுமி பாஜக-வில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சினேகம் பவுண்டேஷன் பெயரில் சமூக வலைத்தளங்களில் பணம் வசூலித்து ஏமாற்றி வருகிறார். அதற்காக அவருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினேன், அது போலியான முகவரி என்பதால் திரும்ப வந்துவிட்டது.
இப்படி மோசடி செய்யும் ஜெயலட்சுமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸ் புகாரில் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
இலங்கையில் மறைந்த நடிகர் எம்ஜிஆர் வாழ்ந்த வீட்டை பார்த்துள்ளீர்களா?- அப்படியே உள்ள விஷயங்கள்

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
