தனது மகள்களை வீட்டிற்கு அழைத்துவந்த கேக் வெட்டி கொண்டாடிய சினேகன்-கன்னிகா... எமோஷ்னல் வீடியோ
சினேகன்
தமிழ் சினிமாவில் நிறைய ஹிட் பாடல்களை எழுதி தவிர்க்க முடியாத பாடல் ஆசிரியர்களில் ஒருவராக, தனது எழுத்துக்கள் மூலம் ரசிகர்களில் மனதில் இடம் பிடித்தவர் சினேகன்.
70க்கும் மேற்பட்ட படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ள சினேகனுக்கு பெரிய அடையாளம் கொடுத்தது பிக்பாஸ் நிகழ்ச்சி தான்.
அந்நிகழ்ச்சி முலமாகவே இவர் இப்படியொரு ஹிட் பாடல்களை எழுதியுள்ளாரா என்பது ரசிகர்களுக்கு தெரிய வந்தது. அந்நிகழ்ச்சி பிறகு அரசியலில் பிஸியாக களமிறங்கிய சினேகன், தற்போது சீரியலில் நாயகனாக நடித்து வருகிறார்.
குழந்தைகள்
இவர் கடந்த 2021ம் ஆண்டு பிரபல சின்னத்திரை நடிகை கன்னிகாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அழகான ஜோடியாக வலம் வந்த இவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன் கர்ப்பமாக இருப்பதை அறிவித்தார்கள்.
இந்த நிலையில் கடந்த ஜனவரி 25ம் தேதி இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் பிறந்தார்கள்.
தற்போது சினேகன் மற்றும் கன்னிகா இருவரும் தங்களது குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து வந்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்கள்.
இதோ அவர்கள் பதிவு செய்த அழகிய வீடியோ,