முதல் முறையாக குழந்தைகளின் முகத்தை காட்டிய கவிஞர் சினேகன்.. அழகிய புகைப்படங்கள் இதோ
சினேகன்
தமிழ் சினிமாவில் 1997ம் ஆண்டு புத்தம் புது பூவே என்ற பாடல் எழுதி பாடலாசிரியராக களமிறங்கியவர் சினேகன். பின்னர் பாண்டவர் பூமியில் அவரவர் வாழ்க்கையில், தோழா தோழா ஆகிய பாடல்களை எழுத செம ஹிட்டடித்தது.
மௌனம் பேசியதே படத்தில் ஆடாத ஆட்டமெல்லாம், சாமி படத்தில் கல்யாணம் தான் கட்டிகிட்டு, ஆட்டோகிராப் படத்தில் ஞாபகம் வருதே, ராம் படத்தில் ஆராரிராரோ, ஆடுகளம் படத்தில் யாத்தே உள்ளிட்ட பல ஹிட் பாடல்களை எழுதியுள்ளார்.
பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் அந்த நிகழ்ச்சிக்கு பின் தனது நீண்டநாள் காதலி கன்னிகாவை திருமணம் செய்துகொண்டார்.
இந்த ஜோடிக்கு சில மாதங்களுக்கு முன் 2 பெண் குழந்தைகள் பிறந்தார்கள். அவர்களுக்கு கமல்ஹாசன் காதல், கவிதை என பெயர் வைத்திருந்தார்.
அழகிய புகைப்படங்கள்
இத்தனை நாட்களாக குழந்தைகளின் புகைப்படத்தை வெளியிடாமல் இருந்த சினேகன், தற்போது குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு அதற்கு கீழ் அழகான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். தற்போது இந்த போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Brain Teaser Maths: அதி புத்திசாலிகளுக்கு மட்டும் தெரிந்த புதிர் - உங்களால் தீர்க்க முடியுமா? Manithan
