பிக் பாஸ் வீட்டில் கணவர் சினேகன், தனிமையை போக்க கன்னிகா ரவி செய்திருக்கும் விஷயம்
சினேகன் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் நிலையில் கன்னிகா ரவி தனியாக டூர் சென்று இருக்கிறார்.
பிக் பாஸ் அல்டிமேட்
முதல் சீசன் பிக் பாஸ் தமிழ் ஷோவில் கலந்துகொண்டு அதிகம் பிரபலம் ஆனார் கவிஞர் சினேகன். அந்த ஷோவில் அவர் சில மோசமான விமர்சனங்களையும் சந்தித்தார். அதன் பிறகு பிக் பாஸ் அல்டிமேட் ஷோவுக்கு போட்டியாளராக வந்திருக்கிறார் அவர்.
சினேகன் கண்டிப்பாக இந்த சீசன் பைனல் வரை வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சினேகன் கடந்த வருடம் தான் நடிகை கன்னிகா ரவியை காதல் திருமணம் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சோலோ டூர் சென்ற கன்னிகா
சினேகன் பிக் பாஸ் சென்று விட்டதால் கன்னிகா ரவி படையப்பா நீலாம்பரி போல வீட்டிலேயே இருந்து பிக் பாஸ் லைவ் 24 மணி நேரமும் பார்த்துக்கொண்டிருந்தாராம். அதை அவரே முன்பு கூறி இருந்தார்.
இந்நிலையில் தற்போது தனது தோழி உடன் கன்னிகா ரவி டூர் சென்று இருக்கிறர். இரைச்சல் இல்லாத அமைதியான சூழலை தேடி எனக்காக இரண்டு நாட்கள் என அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
கன்னிகா ரவி வெளியிட்டு இருக்கும் வீடியோ இதோ
இனி உனக்கு இரண்டாவது இடம் தான்: திருமண நாளில் மனைவிக்கு ஆர்யா கொடுத்த ஷாக்