2026 தமிழ் சினிமா இதுவரை வந்த படங்களில் ஹிட் ஆனது எனென்ன, முழு விவரம் இதோ
2026 தமிழ் சினிமா
தமிழ் சினிமாவில் இந்த வருடம் ஜனவரி முதல் தற்போது வரை நிறைய படங்கள் கிட்டத்தட்ட 120 படங்களுக்கு மேல் வந்துவிட்டது.

இதில் ஹிட் என்று பார்த்தால் சில படங்கள் என்றாலும் பல சிறு பட்ஜெட் படங்கள் பெரிய வசூல் செய்து நம்பிக்கை தரும்படி இந்த வருஷம் அமைந்துள்ளது. கண்டிப்பாக இத்தகைய மாற்றம் தமிழ் சினிமாவிற்கு நல்ல வரவேற்புதான் என பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஹிட் படங்கள்
அந்த வகையில், இந்த வருடம் வெளிவந்த படங்களில் எந்தெந்த படங்கள் ஹிட் என்பதன் முழு விவரம் இதோ..
- TTT
- வித் லவ்
- தாய் கிழவி
- யூத்
- கருப்பு
- ப்ளாஸ்ட்
- ஹாப்பிராஜ்
- கட்டா குஸ்தி 2
- இதயம் முரளி
- அன்பே டயனா
- விஸ்வநாத் அண்ட் சன்ஸ்(தமிழகத்தைத் தவிர அனைத்து ஏரியாக்களிலும் ஹிட்)
- மொத ரத்திரி
- ஹாய்
- இமார்டல்
- DC
- மண்டாடி
- டோரதி
- மீசைய முறுக்கு 2
- பத்தா
இவ்வளவு திரைப்படங்கள் இந்த வருடம் ஹிட் லிஸ்டில் இணைந்துள்ளன. இதை தாண்டி மங்காத்தா ரீ-ரிலீஸ் மிகப்பெரிய வசூல் கொடுத்து. அதுவும் இந்த வருடத்தில் ஹிட் லிஸ்டில் இணைந்துள்ளது. மேலும் துரந்தர் 2, திரிஷியம் 3, வாழா 2, பெத்லகேம் குடும்ப யூனிட், ஸ்பைடர் மேன் ப்ராண்ட் நியூ டே, ஒடிசி, அப்சஷன், Project hail Mary, Michael ஆகிய பிற மொழி படங்களும் தமிழ்நாட்டில் நல்ல ஹிட் அடித்துள்ளன.

மேலும் ஜனநாயகன் தமிழகத்தில் நல்ல வசூல் என்றாலும், அதிக விலைக்கு நடந்த வியாபாரத்தால் இந்த படம் ஆவரேஜ் ஸ்டேட்டஸே பெற்றது. ஹபீபி போன்ற திரைப்படங்கள் நம் கவனத்தை ஈர்த்தன என்பது குறிப்பிடத்தக்கது.