தொடர் தோல்வி படங்கள்.. ஆனாலும் அந்த விஷயத்தில் மவுசு குறையாத நயன்தாரா..
நடிகை நயன்தாரா
லேடி சூப்பர்ஸ்டார் என தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகை நயன்தாரா. இவர் கடந்த 20 ஆண்டுகளாக திரையுலகில் பயணித்து வருகிறார்.
கடந்த ஆண்டு தன்னுடைய நீண்ட நாள் காதலரான இயக்குனர் விக்னேஷ் சிவனை கரம்பிடித்தார். இதன்பின், வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தார்.
நடிகை நயன்தாரா சமீபகாலமாக நடிக்க படங்கள் தோல்வியை தழுவி வருகிறது. இந்த சரிவில் இருந்து ஜவான் திரைப்படம் கண்டிப்பாக நயன்தாராவை காப்பாற்றும் என கூறப்படுகிறது.
மவுசு குறையாது நயன்தாரா
என்னதான் தொடர் தோல்வி படங்கள் கொடுத்தாலும் சம்பளம் விஷயத்தில் நயன்தாராவின் மவுசு கொஞ்சம் கூட குறையவில்லை. சொல்லப்போனால் நயன்தாராவின் சம்பளம் அதிகரித்துள்ளது.
ஆம், இதுவரை ரூ. 10 கோடி சம்பளம் வாங்கி வந்த நயன், இனி தான் நடிக்கும் படங்களுக்கு ரூ. 12 கோடி வரை சம்பளமாக வாங்க முடிவு செய்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
தொடர் தோல்வி படங்கள் கொடுத்தாலும் சம்பளத்தில் டாப்பில் இருக்கிறார் நயன்தாரா என்பது குறிப்பிடத்தக்கது.
4 டிகிரி ஐஸ் நீரில் குளித்த சமந்தா! வீடியோ பார்த்து அதிர்ந்த ரசிகர்கள்

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu

ஜேர்மன் பொதுத் தேர்தல் முடிவுகள் SPD கட்சியினருக்கு கசப்பானது! பிரெடெரிக் மாட்ஸுக்கு சேன்சலர் ஸ்கோல்ஸ் வாழ்த்து News Lankasri
