திருமணத்திற்கு பிறகு தமிழ் படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ள நடிகை சோபிதா.. யாருடைய படம் தெரியுமா?
நடிகை சோபிதா
தமிழ் சினிமாவில் பொன்னியின் செல்வன் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற ஒரு படம்.
இந்த படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் தான் நடிகை சோபிதா துலிபாலா.
இவர் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் போன்ற மொழிகளில் நடித்துள்ள இவருக்கு சமீபத்தில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் நாக சைத்தன்யாவை திருமணம் செய்துகொண்டார்.
புதிய படம்
அட்டகத்தி, கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை ஆகிய படங்கள் மூலம் மக்களின் கவனத்தை பெற்ற பா.ரஞ்சித் இயக்கத்தில் சோபிதா புதிய படம் நடிக்க உள்ளாராம்.
சமீபத்தில் இவர் தங்கலான் என்ற படத்தை இயக்கி இருந்தார். தற்போது பா.ரஞ்சித் வேட்டுவம் என்ற படத்தை இயக்கி வருகிறார். அட்டகத்தி தினேஷ் கதாநாயகனாக நடிக்க ஆர்யா வில்லனாக நடிக்க உள்ளார்.
தற்போது இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை சோபிதா துலிபாலா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.