சோபிதா - நாக சைதன்யா காதல் தொடங்கியது இப்படித்தான்.. ட்ரோல் செய்யப்படும் நடிகை
நடிகை சமந்தா மற்றும் தெலுங்கு நடிகர் நாக சைதன்யா இருவரும் காதல் திருமணம் செய்துகொண்டு சில ஆண்டுகள் ஒன்றாக இருந்தனர். ஆனால் திடீரென அவர்கள் விவாகரத்தை அறிவித்தது எல்லோருக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அப்போது இருந்து நாக சைதன்யாவை நெட்டிசன்கள் தொடர்ந்து தாக்கி கமெண்ட் செய்து வருகின்றனர். அவர் தனது இரண்டாம் மனைவி சோபிதா துளிபலா உடன் புகைப்படங்கள் வெளியிட்டாலும் அதையும் நெட்டிசன்கள் கடுமையாக ட்ரோல் செய்கின்றனர்.
காதல் தொடங்கியது எப்படி
இந்நிலையில் தற்போது சோபிதா அளித்த பேட்டி ஒன்றில் தங்கள் காதல் தொடங்கியது எப்படி என கூறி இருக்கிறார்.
ஒருநாள் சோபிதா ரசிகர்கள் கேள்விக்கு எல்லாம் பதில் கூறிக்கொண்டு இருந்தாராம். அப்போது ஒருவர் 'நீங்கள் ஏன் நாக சைதன்யாவை இன்ஸ்டாவில் follow செய்யவில்லை?' என கேட்டிருந்தாராம்.
'அப்போது நான் அவரது இன்ஸ்டா கணக்கிற்கு சென்று பார்த்தேன், எனக்கு ஷாக் கொடுக்கும் விதமாக அவர் என்னை ஏற்க்கனவே follow செய்து இருந்தார். அவர் வெறும் 70 பேரை தான் பின்பற்றுகிறார். அதில் என் கணக்கும் ஒன்று என்பது எனக்கு ஸ்பெஷலாக இருந்தது.'
'அதற்கு பிறகு தான் எங்களுக்குள் காதல் வந்தது' என சோபிதா கூறி இருக்கிறார்.

Post Office -ன் 2 வருட சூப்பர் திட்டம்.., ரூ.2 லட்சம் முதலீட்டுக்கு எவ்வளவு தொகை கிடைக்கும்? News Lankasri
