சமந்தா முன்னாள் கணவர் நாக சைத்தன்யாவுடன் காதலா?- சோபிதா துலிபாலா விளக்கம்
நாக சைத்தன்யா
தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகர் நாகர்ஜுனாவின் மகன் என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் நுழைந்தவர் நாக சைத்தன்யா. ஒரு 25 படங்கள் வரை நடித்திருப்பார், அதில் அதிகம் தெலுங்கு படங்கள்.
இதிலும் சில படங்கள் சிறப்பு தோற்றத்தில் மட்டும் நடித்திருப்பார். கடைசியாக தமிழ், தெலுங்கு என இரண்டிலும் தயாராகி வெளியாகி இருந்த திரைப்படம் கஸ்டடி. படம் வெளியாகி சாதாரண வரவேற்பையே பெற்றிருந்தது.
தற்போது இவர் Thandel என்ற படத்தில் நடித்து வருகிறார். படங்களை தாண்டி நாக சைத்தன்யா, நடிகை சமந்தாவை திருமணம் செய்ததன் மூலம் தமிழில் அதிகம் பிரபலம் ஆனார். ஆனால் இப்போது இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.

சோபிதா காதல்
இந்த நிலையில் நாக சைத்தன்யா மற்றும் சோபிதா இருவரும் காதலிக்கிறார்கள் என நிறைய வதந்திகள் கிளம்பியுள்ளது.
இதுகுறித்து நடிகை ஒரு பேட்டியில், உண்மை என்னவென்று தெரியாமல் பேசுபவர்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை.
நான் எந்த தவறும் செய்யாதபோது, அதைப் பற்றிய விளக்கத்தை நான் ஏன் கொடுக்க வேண்டும் என கோபமாக பதில் அளித்துள்ளார்.

தொழில்களை ஆந்திர மாநிலத்திற்கு தாரை வார்க்கும் தவெக அரசு - எடப்பாடி பழனிசாமி விமர்சனம் IBC Tamilnadu
நெதன்யாகுவின் அழுத்தம்... அணு ஆயுதத் தாக்குதலுக்கும் ட்ரம்ப் தயாராகலாம்: அம்பலப்படுத்தும் கார்ல்சன் News Lankasri
மகளின் காதலைக் கண்டிக்க பிக் பாஸ் வீட்டுக்கே வந்த பெற்றோர் - சாகத் தோனுது எனக் கதறிய போட்டியாளர்! Manithan