திருமணம் ஆகி ஒரு வருடம் கூட ஆகாத நிலையில் விவாகரத்தா.. நடிகை கொடுத்த பதிலடி
சோனாக்ஷி சின்ஹா
பாலிவுட் சினிமாவில் நடிகர்களின் வாரிசுகள் களமிறங்குவது வழக்கமான ஒரு விஷயம் தான்.
வாரிசு நடிகர்கள் தான் பாலிவுட் சினிமாவை ஆள்கிறார்கள் என்ற ஒரு பஞ்சாயத்தே உள்ளது. அப்படி பிரபலத்தின் மகள் என்ற அடையாளத்தோடு பாலிவுட் சினிமாவில் நாயகியாக களமிறங்கியவர் தான் நடிகை சோனாக்ஷி சின்ஹா.
இவர் தமிழில் ரஜினியுடன் லிங்கா என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார்.
திருமணம்
சோனாக்ஷி, ஜாஹிர் இக்பால் என்பவரை 7 ஆண்டுகளாக காதலித்து பின் கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
இவர்கள் எந்த புகைப்படம், வீடியோ வெளியிட்டாலும் இவர் விரைவில் பிரிந்துவிடுவார்கள், கேமராவிற்காக நடிக்கிறார்கள் என எதிர்மறை கமெண்ட் வந்துகொண்டிருக்கிறது.
சமீபத்தில் வைரலான சோனாக்ஷி அவரது கணவரின் வீடியோவிற்கு கீழ் ஒரு ரசிகர், உங்கள் விவாகரத்து நெருங்கிவிட்டது என்று கருத்து தெரிவித்திருந்தார்.
அதற்கு நடிகை சோனாக்ஷி முதலில் உன் அம்மா அப்பா விவாகரத்து செய்வார்கள், பிறகு நாங்கள்... இது சத்தியம் என்று பதிலளித்தார்.