கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் நடிகை சோனம் கபூர் எடுத்த போட்டோ ஷுட்- செம வைரல்
வலிமை தயாரிப்பாளர் போனி கபூருக்கு அனில் கபூர் என்ற தம்பி இருக்கிறார். அவரது மகள் சோனம் கபூர் ஒரு நடிகை. 2007ம் ஆண்டு பாலிவுட் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார்.
படங்கள் பற்றிய விவரம்
இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனரான சஞ்சய் லீலா பன்சாலி இயக்கிய சாவரியா படத்தில் அறிமுகமானார். இப்படம் தஸ்தயேவ்ஸ்தி எழுதிய வெண்ணிற இரவுகள் குறுநாவலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம்.

திருமண வாழ்க்கை
கடந்த 2018ம் ஆண்டு தனது நீண்டகால நண்பரான தொழில் அதிபர் ஆனந்த் அஹுஜாவை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்கள் நடித்துவந்த சோனம் கபூர் அண்மையில் தான் கர்ப்பமாகி இருக்கும் செய்தியை வெளியிட்டார்.
அவருக்கு பிரபலங்கள் ரசிகர்கள் என அனைவரும் வாழ்த்து கூறி வந்தார்கள்.

போட்டோ ஷுட்
இந்த நிலையில் எல்லா நடிகைகளை போல சோனம் கபூரும் கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் அழகிய போட்டோ ஷுட் ஒன்றை நடத்தியுள்ளார். அப்புகைப்படங்களை அவர் இன்ஸ்டாவில் வெளியிட அனைவரும் நல்ல கமெண்ட்ஸ் கொடுத்து வருகிறார்கள்.

நடிகை கௌதமியின் மகளா இது, ஹீரோயின் போல் அழகாக இருக்கிறாரே- லேட்டஸ்ட் க்ளிக்