சட்டப்படி இதை சந்திப்பேன், உச்சக்கட்ட கோபத்தில் சோனியா அகர்வால்
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடிக்கட்டி பறந்த நடிகை சோனியா அகர்வால். இவர் நல்ல பீக்கில் இருந்த போதே இயக்குனர் செல்வராகவனை திருமணம் செய்துக்கொண்டார்.
பின் சில வருடங்களிலேயே இவர்களுடைய திருமண வாழ்க்கை முடிவு பெற்றது, இருவரும் ஒரு மனதாக விவாகரத்து பெற்றனர்.
இதை தொடர்ந்து ஒரு சில படங்களில் சோனியா நடித்து வந்தார், தற்போது சோனியா அகர்வால் வீட்டில் போதைப்பொருள் சோதனை நடத்தியதாக ஒரு செய்தி பரவியது.
இந்த செய்தியை சோனியா கடுமையாக மறுத்தது மட்டுமில்லாமல், இதனால் எங்கள் குடும்பம் மிக மன உளைச்சலில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
அதோடு இதை நான் சும்மா விடமாட்டேன், கண்டிப்பாக யார் எப்படி வதந்தி பரப்பியவர்கள் என கண்டுப்பிடித்து சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.